Thursday, January 05, 2012

தொழிலதிபர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் உதவும் பயனுள்ள மென்பொருள்



புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஓன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற பொத்தானை சொடுக்கி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் அக்கவுண்டிங் தகவல்களை கொடுக்க வேண்டியது தான்.
இணைய இணைப்பு மட்டும் தான் தேவை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணணியில் நிறுவி குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் ஓன்லைன் மூலம் நம் அக்கவுண்டிங் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை அப்டேட் செய்யலாம்.
இதை எல்லாம் விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது, அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை சொடுக்கி ஆரம்பம் முதல் இந்த அக்கவுண்டிங் மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லி கொடுக்கின்றனர்.

Download As PDF

No comments:

Post a Comment